மது அருந்திவிட்டு தாயிடம் வாக்குவாதம் செய்த மகளை தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
துருக்கி நாட்டைச் சேர்ந்த ஹசன் என்பவர் இறைச்சி கடை வைத்திருக்கிறார். இவரது மகள் டிடேம் நடன மங்கையாக இருந்து வந்தார். இந்நிலையில் ஒருநாள் டிடேம் நன்றாக மது அருந்திவிட்டு தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் அவரது தாய் எதற்காக வீட்டிற்கு குடித்துவிட்டு வந்தாய் என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு டிடேம் தனது தாயிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் கோபமடைந்த ஹசன் மகள் என்றும் பாராமல் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டார்.
அதன்பிறகு தான் கடையில் பயன்படுத்தும் இறைச்சி வெட்டும் கத்தியால் மகளை துண்டு துண்டாக வெட்டி ஃப்ரீசரில் வைத்து அடைத்தார். அதன்பிறகு உடல் பாகங்களை ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சமாக வீசி எறிந்து உள்ளார். இந்நிலையில் விறகு பொறுக்க சென்றவர் ஒருவரது கண்ணில் காகிதத்தில் மறக்கப்பட்ட கை தென்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
விரைந்து வந்த காவல்துறையினர் கையில் இருந்த ரேகைகளை வைத்து அது டிடேம் என்பதை கண்டறிந்து விசாரணை மேற்கொள்கையில் ஹசன் தனது மகளை கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஹசனை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரிக்கையில், ஹசன் தனது மகள் செய்தது பெரிய தவறு. தந்தை தாயை மதிக்காததால் தான் அவளுக்கு இந்த தண்டனை என கூறியுள்ளார். காவல்துறையினர் ஹசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவருக்கு 24 வருடம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.