மத்தியபிரதேசம் மாநில பா.ஜ.க மந்திரி ஜனார்தன் மிஸ்ரா ஆவார். இவர் அந்த மாநிலத்தின் ரீவா நகரில் நீர் பாதுகாப்பு குறித்து நேற்று நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்டார். அப்போது மந்திரி ஜனார்தன் பேசியிருப்பதாவது, நிலத்தில் நீர் இன்றி வறண்டு வருகிறது.
இதனால் நீர் சேமிக்கப்பட வேண்டும். மதுஅருந்துங்கள், புகையிலை சாப்பிடுங்கள், கஞ்சா குடியுங்கள், தின்னர், சொலுயூஷன் வாசனையை நுகருங்கள் மற்றும் அயோடெக்ஸ் சாப்பிடுங்கள், ஆனால் நீரின் முக்கியத்துவத்தை உணருங்கள்.
ஏராளமான நீர்நிலைகள் வறண்டு வருகிறது. போர்வல் மற்றும் டியூப்வல் வாயிலாக தண்ணீரை எடுத்து நிலத்தடி நீரை மக்கள் காலி செய்கின்றனர். உங்களுடைய பணத்தை எப்படி வேண்டுமானாலும் வீணடியுங்கள். ஆனால் நீர் பாதுகாப்பில் முதலீடு செய்வது முக்கியமானது என்று பேசினார்.