மது அருந்துவதற்கு பணம் கொடுக்காததால் தாய் என்றும் பாராமல் தாக்கிய மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள சர்ச் தெருவில் அன்பழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், மருதுபாண்டி என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் மருதுபாண்டி மது பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து வேலைக்கு செல்லாததால் மது அருந்துவதற்கு தனது தாயாரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கடந்த மாதம் 28ஆம் தேதி மருதுபாண்டி மது அருந்துவது தனது தாயிடம் பணம் கேட்டு தகராறு ஈடுபட்டுள்ளார். அப்போது சாந்தி பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த மருதுபாண்டி தாய் என்றும் பாராமல் அவரை தாகி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சாந்தி அளித்த புகாரின் அடிப்படையில் போடி டவுன் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மருதுபாண்டியை கைது செய்துள்ளனர்.