Categories
தேசிய செய்திகள்

மது, இறைச்சி விற்க தடை…. மாநில முதல்வர் அதிரடி உத்தரவு….!!!

மதுராவில் மது, இறைச்சி விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணபகவான் பிறந்த ஊரான மதுராவில் மது, இறைச்சி விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். ஜென்மாஷ்டமியொட்டி கடந்த 30ஆம் தேதி மதுரா சென்றிருந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த கோரிக்கையை விரைவில் நிறைவேற்றுவதாக கூறியிருந்தார்.

அதன்படி மதுரா சுற்றியுள்ள 10 கிலோமீட்டர் சுற்றளவுக்கு மது, இறைச்சிக்கு தடை விதித்து நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு மத தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் மதுராவில் மது, இறைச்சி விற்பனையில் ஈடுபடுவோர் அதற்கு பதிலாக பால் விற்பனையை தொடங்குமாறு யோகி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டுள்ளார். மதுராவில் பால் உற்பத்தி மற்றும் விற்பனையை ஊக்குவிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |