மது கிடைக்காததால் சானிடைசரை எடுத்து குடித்து 5 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் நேற்று மதுபானக் கடைகள் பூட்டப்பட்டிருந்ததால் உள்ளூர் வாசிகளுக்கு மதுபானம் கிடைக்கவில்லை. இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த மதுப்பிரியர்களுக்கு திடீரென ஒரு யோசனை வந்துள்ளது. “மதுபானம் கிடைக்கவில்லையென்றால் என்ன ஆல்கஹால் சானிடைசரை குடிப்போம்” என எண்ணி, கும்பலாக சேர்ந்து ஆல்கஹால் சானிடைசரை குடித்துள்ளனர்.
இதனால் நேற்றிரவு நான்கு பேர் உயிரிழந்த நிலையில், இன்று காலை ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர்.