Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமை…. மர்மமான முறையில் இறந்த மூதாட்டி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆவணிப்பூர் கிராமத்தில் மல்லிகா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மல்லிகாவின் கணவர் இறந்துவிட்டார். இதனால் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான தாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் வயல்வெளியில் மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரும் மூதாட்டியும் நேற்று முன்தினம் குடிபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் மல்லிகா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |