Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மது குடிக்க வர மறுத்த நண்பர்…. ஆட்டோ ஓட்டுனரின் மூர்க்கத்தனமான செயல்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மகாராஜாபுரத்தில் ஆட்டோ ஓட்டுனரான இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஊரல்கரைமேடு பகுதியில் வசிக்கும் சோமஸ் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் சவிதா தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று சோமஸ் போதையில் இருந்துள்ளார்.

அவர் இளையராஜாவை மீண்டும் மது குடிப்பதற்கு அழைத்துள்ளார். அதற்கு தன்னை நாய் கடித்து விட்டது எனவும், மது குடிக்க வரவில்லை எனவும் இளையராஜா கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த சோமஸ் இளையராஜாவை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து இளையராஜா அளித்த புகாரின் பெயரில் வழக்குபதிவு செய்த போலீசார் சோமஸை கைது செய்தனர்.

Categories

Tech |