Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மது குடித்து கொண்டிருந்த நண்பர்கள்…. லாரி ஓட்டுநரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

லாரி மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் பகுதியில் கமலக்கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான குமரன், நவீன் ஆகிய 2 பேருடன் சேர்ந்து அதே பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது இவர்களுக்கும் லாரி ஓட்டுனருக்கும்  இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த  லாரி ஓட்டுநர்  மது குடித்து கொண்டிருந்த கமலக்கண்ணன், குமார், நவீன ஆகிய 3 பேரும் மீதும்  லாரியை ஏற்றியுள்ளார் . இதில் படுகாயமடைந்த கமலக்கண்ணன், குமரன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

மேலும் காயமடைந்த நவீனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நவீன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுநர் உள்ளிட்ட  2 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Categories

Tech |