மது, சாராயம் விற்ற 20 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்த நிலையில் மது பிரியர்கள் பலர் முன் கூட்டியே தங்களுக்கு தேவையான மது வகைகளை வாங்கி வைத்துக் கொண்டார்கள். கடைகள் திறக்காததால் மது கிடைக்காதவர்கள் சாராயத்தை தேடி சென்று குடித்தார்கள். மேலும் சிலர் அதிக மது பாட்டில்களை வாங்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தார்கள்.
இத்தகவலை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் மது, சாராய விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் வேலூர் மாவட்டம் முழுவதும் மது, சாராயம் விற்ற 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். மேலும் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களும், சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டது.