கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள புங்கம்பள்ளி பகுதியில் கூலித்தொழிலாளியான சக்திவேல்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் சக்திவேல் மது குடிக்கும் பழக்கத்தை கைவிட முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சக்திவேல் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சக்திவேலை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.