திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் ஆத்துமேட்டில் இருக்கும் பிரியாணி கடையில் முகமது கனி என்பவர் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஒட்டன்சத்திரம் சாலையில் இருக்கும் மதுபான கடைக்கு சென்று குவாட்டர் பாட்டில் மதுபானத்தை வாங்கியுள்ளார். அதில் ஈ மற்றும் தூசுக்கள் மிகுந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த முகமதுவும், மது பிரியர்களும் அதனை செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.
இதனை அறிந்த டாஸ்மார்க் ஊழியர்கள் முகமது கனியை சுற்றிவளைத்து அவரிடம் இருந்த மதுபாட்டிலை வாங்கிக்கொண்டு வேறு பாட்டில் கொடுத்து அனுப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.