Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மது பாட்டிலுக்குள் மிதந்த குட்டி தவளை…. வலைதளத்தில் வைரல் வீடியோ…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!c

மது பாட்டிலுக்குள் தவளை மிதக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நெல்லூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான பாண்டி(51) என்பவர் வசித்து வருகிறார். நேற்று மதியம் பாண்டி சித்தரேவு அரசு மதுபான கடைக்கு சென்றுள்ளார். அங்கு பாண்டி குவாட்டர் பாட்டிலை வாங்கி மது குடிப்பதற்காக அதனை குலுக்கியுள்ளார். அப்போது பாட்டிலுக்குள் இறந்த நிலையில் குட்டித் தவளை மிதப்பதை பார்த்து பாண்டி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து டாஸ்மாக் கடையின் விற்பனையாளரிடம் கேட்டபோது அவர் சரியான பதில் அளிக்கவில்லை. அதன்பிறகு விற்பனையாளர் வேறு மது பாட்டிலை தருவதாக கூறி சமரசம் செய்ய முயன்றுள்ளார்.

ஆனால் பாண்டி மது பாட்டிலை விற்பனையாளரிடம் கொடுக்காமல் தனது வீட்டிற்கு எடுத்து சென்று விட்டார். இதுகுறித்து அறிந்த ஏராளமானோர் பாண்டியின் வீட்டிற்கு சென்று மதுபாட்டிலில் மிதந்த தவளையை பார்த்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மது பிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |