திமுக நிர்வாகி காவலரை அடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி திமுக ஐடி விங்கின் ஒருங்கிணைப்பாளராக பி.கே ரவி இருக்கிறார். இவர் கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு விதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இவர் ஓசூர் எம்.எல்.ஏ ஒய். பிரகாஷ் இன் உறவினர் ஆவார். அதன்பிறகு பி.கே ரவி டிஜேபி சைலேந்திரபாபுவுடன் எடுத்த புகைப்படத்தை வைத்து காவல் நிலையத்தில் இருந்து கொண்டு காவலர்களை மிரட்டுவதில் வல்லவர் என்றும், உயர் அதிகாரிகள் முதல் அனைத்து அதிகாரிகளிடமும் ஒரே மாதிரியான ஸ்டைல் தான் என்றும் திமுகவினர் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி பி.கே ரவியின் செயல்பாடுகள் அனைத்தும் அராஜகமாகவே இருக்கிறது என திமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் பி.கே ரவி கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு ஒரு காரில் வந்து கொண்டிருந்தார். இவர் வந்த காரில் ஏராளமான பீர் பாட்டில்கள் இருந்தது. இந்த காரை காவலர்கள் நிறுத்தி சோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பி.கே ரவி நான் திமுகவை சேர்ந்தவர், என்னையே சோதனை செய்ய போகிறாயா என்று கேட்டு காவலரை தாக்குவதற்கு முயற்சி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவலர் கோகுல் நடந்ததை தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோவில் பி.கே ரவி ஜாலியாக போஸ் கொடுக்கிறார். மேலும் பி.கே ரவி தான் திமுக கட்சியை சேர்ந்தவர் என்று கூறி செய்யும் அராஜகங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் தட்டி கேட்க வேண்டும் என பலர் கூறுகின்றனர்.