Categories
மாநில செய்திகள்

மது பாட்டில்கள் விற்பனை…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அந்த மனுவில் “தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள், கண்ணாடி பாட்டில்களில் அடைத்து வைத்து விற்கப்படுகின்றன. அதை வாங்கி அருந்துவோர் பாட்டில்களை உடைத்து வயல்வெளிகளில் வீசி செல்கின்றனர். கண்ணாடி பாட்டில்கள் விரைவில் மக்கும் தன்மை கொண்டவை இல்லை என்பதால் அது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

புதுச்சேரியில் பாக்கெட் மாற்று பிளாஸ்டிக் பாட்டில்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இவ்வழக்குப் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், “பிளாஸ்டிக் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கண்ணாடிகளை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட முடியாது. மேலும் கண்ணாடி பாட்டில்களை வயல்வெளியில் வீசுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி மனுவில் கோரிக்கை வைக்கப்படவில்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர். கண்ணாடி பாட்டில்களை மறுசுழற்சி செய்ய முடியும் என தெரிவித்த நீதிபதிகள், தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கண்ணாடி பாட்டில்கள் பயன்படுத்தப்படுவதால் கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறினர்.

Categories

Tech |