Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மது பாட்டில்கள் விற்பனை… “9 பேர் கைது”… போலீஸ் அதிரடி..!!!

சாராயம், மதுபாட்டில்களை விற்ற 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் பகுதியில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா, சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சாராயம் விற்றதாக விழுப்புரம் ஜி.ஆர்.பி தெருவில் வசித்து வந்த 37 வயதுடைய பாலமுருகன், 60 வயதுடைய ஆதிலட்சுமி, 55 வயதுடைய தேவகி, மேலமங்கலத்தை சேர்ந்த 55 வயதுடைய பிச்சுமணி ஆகியோரை கைது செய்துள்ளனர்.

மேலும் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்றதாக டி. குமாரமங்கலம் பகுதியில் வசித்து வந்த 55 வயதுடைய சந்திரா, ஆலம்பூண்டி வடமலை(70), தொட்டி குடிசையை  சேர்ந்த 65 வயதுடைய சேகர், நாயனூர் ஜெயா(65), கோட்டமருதூர் குமாரி(43) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |