தமிழகத்தில் மூன்று நாட்கள் மதுபானக் கடைகள் மூடப்படும் என தமிழக டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி மதுபான கடைகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள பொது விதிமுறைகள் மற்றும் உள்ளூர் விடுமுறை தினத்தன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் ஜனவரி மாதம் அரசு விடுமுறைகள் அடுத்தடுத்து வருகின்றன.
அதன்படி ஜனவரி மாதம் 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 26ம் தேதி குடியரசு தினம், 28ஆம் தேதி தைப்பூசம் ஆகிய நாட்களில் மதுபான கடைகளுக்கு பொது விடுமுறை என அரசு அறிவித்துள்ளது. குடியரசு தினத்திற்கு இந்திய அளவிலான பொது விடுமுறை அமலில் உள்ளது. இந்நிலையில் ஜனவரி 15, ஜனவரி 26, ஜனவரி 28 ஆகிய தேதிகளில் மதுபானக் கடைகள் மூடப்படும் என்று தமிழக டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது.