Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி!… டாஸ்மாக் கடையில் தரமற்ற மது விற்பனை….!!!!

மதுக்கடையில் தரமற்ற மது விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே மண்வயல் பகுதியில் மதுக்கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையில் மது வாங்குவதற்காக ஒருவர் சென்றுள்ளார். அவர் பாட்டிலை திறந்து மதுவை குடிக்கும் போது அதில் வெங்காயம், புகையிலை போன்றவைகள் கிடந்துள்ளது.

இதுகுறித்து கடை உரிமையாளரிடம் கேட்டபோது அவர் சரியான முறையில் பதிலளிக்கவில்லை. மேலும் மதுவின் விலையை உயர்த்திய யதோடு தரமற்ற மதுவையும் விற்பனை செய்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர் உரிய ஆதாரங்களுடன் வருவாய்த்துறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூடலூர் தாசில்தார் கூறியுள்ளார்.

Categories

Tech |