கர்நாடகாவில் நடப்பு ஆண்டு பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் பசவராஜ் பொம்மை தாக்கல் செய்தார். அப்போது மது பானங்களுக்கு எந்தவிதமான வரியையும் உயர்த்தவில்லை. பட்ஜெட்டில் வரி உயர்வு விதிக்கப்பட்டதால் மதுபானங்களின் விலை கர்நாடகாவில் உயர்த்தப்படாத என்று கலால் துறை அமைச்சர் தெரிவித்தார். ஆனால் கடந்த சில நாட்களாக டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மதுபானங்களை கொண்டு செல்வதற்காக ஆகும் செலவு தொடர்ந்து அதிகரித்துள்ளது. அதன் காரணமாக பீர் விலையை மட்டும் உயர்த்துவதற்கு பீர் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
அதேசமயம் பீர் தயாரிக்க பயன்படும் அத்தியாவசிய பொருட்களின் விலையையும் உயர்த்தி இருப்பதால் பீர் விலையை உயர்த்த சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. மேலும் பீர் விலையை உயர்த்தக் கோரி கலால்துறை கிபீர் நிறுவனங்கள் மனு கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக கலால்துறை ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு கலால்துறை சம்மதித்தால் வருகின்ற 15 ஆம் தேதியில் இருந்து ஒரு பாட்டில் பீர் விலை 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்த்த பீர் நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இந்த தகவல் மது பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.