சென்னையில் வரும் 15ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் அமிர்தஜோதி உத்தரவிட்டுள்ளார்.
நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. குடியரசுத் தினம், காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம் போன்ற நாட்களில் மதுபான விற்பனை கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதன்படி சென்னையில் வரும் 15ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் அமிர்தஜோதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “வருகிற 15-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றது.
இந்த தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதை சார்ந்தவர்கள் பார்கள், ஹோட்டல்கள் சார்ந்த பார்கள் மற்றும் பல்வேறு உரிமங்கள் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும். அன்றைய தினம் விதிமுறைகளை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.