உத்திரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ராமர் கோவிலில் கருவறையை முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து உத்திரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தி மற்றும் மதுரா கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் மதுபான விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டார். இதுகுறித்து மாநில அரசு சார்பில் வெளியான அறிவிப்பில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமன் கோயில் அருகிலும், மதுராவில் அமைந்திருக்கும் கிருஷ்ண ஜென்மபூமி அருகிலும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் அயோத்தியில் உள்ள மதுபான விற்பனை மையங்களுக்கு வழங்கப்பட்டிருந்த உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு ஜூன் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன்மூலம் அயோத்தி மற்றும் மதுரா பகுதிகளில் சுற்றி அமைந்திருக்கும் 37 மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளது. மேலும் விற்பனையை நிறுத்தி விட்டு பால் விற்பனை செய்ய மதுபான வியாபாரிகளுக்கு அம்மாநில அரசு பரிந்துரை வழங்கியுள்ளது.