தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோய் தாக்கம் காரணமாக எதிர்கட்சிகள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் கடைகள் நேரம் குறைக்கப்பட அல்லது டாஸ்மாக் கடைகள் மூடப்பட வாய்ப்புள்ளதா ? என அனைவரும் கேள்வி கேட்கிறீர்கள். புதுச்சேரி, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலையின் போது கடைகள் எதுவுமே மூடப்படவில்லை.
எனவே அப்போது தமிழகத்திற்குள் மதுபானங்கள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதனால் பல குற்றச் சம்பவங்களும் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இருப்பினும் தற்போது தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நேரம் குறைக்கப்படுவது அல்லது டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது குறித்து முதலில் மருத்துவர் குழுவினருடன் ஆலோசனை நடத்தப்படும். அதன்பிறகே முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார்.