Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடல்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. எனவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் இயங்க தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் நாளான பிப்ரவரி 22-ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அனைத்து மாவட்டங்களுக்கு உட்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 19.02.2022 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளதால், வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் 17.02.2022 காலை 10 மணி முதல் 19.02.2022 நள்ளிரவு 12 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 22.02.2022 அன்று வாக்கு எண்ணுகை நடைபெறும் பகுதிகளிலும், மேற்படி பகுதிகளுக்கு அருகில் 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் மதுக்கூடம் மற்றும் மதுபானக்கடைகள் மூடியிருக்க, உரிய ஆணைகள் வெளியிட அரசை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.

அதன்படி, மேற்படி நாட்களில் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும், வாக்கு எண்ணுகை நடைபெறும் பகுதிகளிலும், அப்பகுதிக்கு அருகில் 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும், பீர், ஒயின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்யும் மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடம் மூடுவதற்கு அரசாணை எண்.16-ல் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, நாள் 04.02.2022-ல் அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே வாக்குப்பதிவு நாளில் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நாளில் வாக்குகள் எண்ணப்படும் பகுதிகளிலும், அப்பகுதிகளுக்கு அருகில் 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும், பீர், ஒயின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்வதோ அல்லது மதுக்கூடம் திறப்பதோ அல்லது அதனை இப்பகுதிகளில் எடுத்துச் செல்வதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், மீறுபவர்கள் மீது உரிய சட்டம் மற்றும் விதிகளின்படி நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்படுள்ளது.

Categories

Tech |