மதுபான கடைகளை மூட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை கிராம மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு ஜூலை 12-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்நிலையில் தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஏற்படும் அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் நாளை வரை காலை 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மதுபான கடைகளை மூடுமாறு மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அதேபோன்று ஜூலை 12-ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மாவட்டத்தில் கடைகளை மூடுமாறு மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மற்ற மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவை மீறி கடைகளை திறப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.