இந்தியாவில் டிசம்பர் 29 ஆம் தேதி முதல் மது குடிக்க வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வட இந்திய மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, வடக்கு ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் டிசம்பர் 29 ஆம் தேதி முதல் தீவிரமான cold wave உருவாக இருப்பதால் விட்டமின் சி அடங்கிய பழங்களை உண்ணுமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி தங்கள் உடலை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் வீட்டுக்குள் இருக்குமாறும், மது குடிப்பதை முற்றிலும் தவிர்க்குமாறும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. Cold wave என்பது குறைந்தபட்சம் 10 டிகிரிக்குள் தொடங்கி 4.4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கும் என்று சொல்லலாம் என்று குறிப்பிட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.