மது குடிப்பதால் வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்பதை உணர்ந்தும் பலர் அதை அருந்துகின்றனர். இவ்வாறு மது அருந்துவதால் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனினும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அளவுக்கு அதிகமாக மது அருந்துவதால் உயிரிழக்கும் அபாயங்களும் நிகழ்கிறது. தற்போது மதுகுடித்து மயங்கி விழுந்த ஒரு நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர் பேட்டை அம்பேத்கர் நகர் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (40). இவருக்கு நதியா (35) என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள், ஒரு மகன் இருக்கின்றனர். இதில் ஆறுமுகம் செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த ஆறுமுகம் மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆறுமுகத்தை அவரது மனைவி நதியா பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு ஆறுமுகத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மனைவி நதியா காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.