Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களே எச்சரிக்கை… போதையால் நடந்த விபரீதம்…. நொடியில் பறிபோன உயிர்..!!!!

இடுப்பில் சொருகி இருந்த மது பாட்டில் உடைந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள சான்றோர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வெங்கடேஷ் மது அருந்தியதாக கூறப்படுகிறது.இதையடுத்து வீடு திரும்பும் போது இரண்டு மதுபாட்டில்களை வாங்கி தனது இடுப்பில் சொருகிக் கொண்டு சைக்கிளில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வேகத்தடை ஒன்றில் நிலைதடுமாறிய வெங்கடேஷ் திடீரென கீழே விழுந்துள்ளார்.

அதனால் அவரது இடுப்பில் சொருகி இருந்த மது பாட்டில்கள் உடைந்து அவரது வயிற்றில் குத்தி உள்ளது. இதனால் வலியில் துடித்த அவரை அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இடுப்பில் செருகியிருந்த மது பாட்டில் உடைந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |