தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக இருக்கும் என்பதால் காவல்துறை பல முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தற்போது புத்தாண்டில் அளவுக்கு அதிகமாக போதையில் மிதக்கும் மது பிரியர்கள் வாகனம் ஓட்டுவதால் விபத்து நேரிடும்.
இதனால் போலீசாரின் அபராத நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதனைத் தவிர்க்க சென்னையில் நட்சத்திர விடுதி மற்றும் நகரின் முக்கிய இடங்களில் க்யூ ஆர் கோடு ஒட்டப்படும். இதனை ஸ்கேன் செய்தால் தனியார் கால் டாக்ஸி வசதி கிடைக்கும் என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.