Categories
தேசிய செய்திகள்

மது பிரியர்களே செம ஹேப்பி நியூஸ்… 10 நிமிடங்களில் ஹோம் டெலிவரி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!

கொல்கத்தாவில் உள்ள ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் 10 நிமிடங்களில் மதுபானத்தை டெலிவரி செய்யும் சேவையை தொடங்கியுள்ளது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இன்னொவென்ட் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்டின் முதன்மை பிரண்டான ‘பூசி’ இந்தியாவின் முதல் 10 நிமிட மதுபானம் வினியோகம் தளம் என்று கூறியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆன்லைன் மூலமாக பல நிறுவனங்கள் ஏற்கனவே மதுபானங்களை வீடுகளுக்கு டெலிவரி செய்து வருகின்றன. அதே நேரத்தில் பல நிறுவனங்கள் ஹோம் டெலிவரி செய்தாலும் இதுவரை ஆர்டர் செய்த 10 நிமிடங்களில் டெலிவரி செய்யும் சேவை வழங்கவில்லை என்று ஹைதராபாத்தை தளமாக கொண்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. மேற்குவங்க மாநில கலால் துறையில் ஒப்புதலுக்கு பிறகு கிழக்கு பெருநகரில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ‘பூசி’ என்பது நுகர்வோர் நடத்தை மற்றும் ஒழுங்கு முறைகளை முன்னறிவிக்கும் புதுமையான ஏஐ-யை பயன்படுத்தி 10 நிமிடத்தில் மதுபானங்களை டெலிவரி செய்வதுடன், அருகில் உள்ள கடைகளில் இருந்து மதுபானங்களை எடுத்துச் செல்லும் ஒரு விநியோக தொகுப்பாகும். இதனைத் தொடர்ந்து இன்னோவென்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம் பி2பி லாஜிஸ்டிக்ஸ் மேலாண்மை தளத்தை உருவாக்கி உள்ளது. இது டெலிவரி செலவுகளை மேம்படுத்தி ‘பூசி’ மலிவான தளமாக மாற்றும். நுகர்வோர் சேவை மற்றும் சந்தையில் தற்போது விநியோகத்தின் பற்றாக்குறையை எளிதாக்க, இதுபோன்ற விநியோகத்திற்கு அனுமதியளித்த மேற்கு வங்க அரசின் நடவடிக்கைகளை வரவேற்கிறோம் என்று பூசி இணை நிறுவனர் மற்றும் சிஇஓ விவேகானந்தர் பலிஜெபள்ளி கூறினார். மேலும் குறைந்த வயதுக்குட்பட்டவர்களுக்கு விநியோகம், கலப்படம், அதிகப்படியான நுகர்வு போன்ற மதுபான வினியோகத்துடன் தொடர்புடைய பெரும்பாலான அச்சங்கள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |