Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களே…. நாளை (ஜூன் 15) முதல் டாஸ்மாக் கடைகளில் புதிய நடைமுறை…. முக்கிய அறிவிப்பு…..!!!!

திண்டுக்கல் -கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள மதுபான கடைகளில் மது பாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்த அறிவிப்பை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். மதுக்கடைகளில் மது பானம் வாங்குவோர் அரசு நிர்ணயித்ததை விட பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும். அதன்பிறகு காலி பாட்டிலை டாஸ்மாக் கடைகளில் ஒப்படைத்து பத்து ரூபாயை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

மது பிரியர்கள் மலைப் பகுதியில் காலி மது பாட்டில்களை வனப்பகுதிகளில் வீசுவதால் அவற்றை விலங்குகள் மிதிக்கும் போது காயம் அடைகிறது. அதுமட்டுமல்லாமல் அடுத்த மூன்று மாதங்களில் அந்த விலங்குகள் இழந்து விடுவதாகவும் கருத்து எழுந்த நிலையில் இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. இதுபோன்ற திட்டம் ஏற்கனவே நீலகிரியில் நடைமுறையில் உள்ளது. இதன் மூலமாக சுற்றுச்சூழல் சீர்கேடு தடுக்கப்படுகிறது. எனவே இதுபோன்ற திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |