Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களே…. மது, போதைப்பொருள் சாப்பிட்டால்…. என்ன பரிசு தெரியுமா?…. வைரலாகும் விளம்பரம்…!!!

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் அதிக அளவில் மழை மற்றும் கிராம பகுதிகளை கொண்ட மாவட்ட கிருஷ்ணகிரி. இந்த மாவட்டத்தில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 18,79,870 பேர் உள்ளனர். இதில் கிராம மக்கள் மட்டுமே 4,28,363 பேர் உள்ளனர். மேலும் மாவட்டத்தில் எழுத்தறிவு விகிதம் 72.41% உள்ளனர். அதனை தொடர்ந்து ஆந்திரா,கர்நாடகா மாநிலங்களின் எல்லையாகக் கொண்ட இந்த மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதற்கான காரணம் என்னவென்றால் மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்கள் என்று தான் கூறப்படுகிறது. இதனால் போதை பழக்கத்தில் இருந்து மக்களை மீட்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் மலை கிராமங்களில் சிலர் சட்டவிரோதமாக கள்ளசாரயம் விற்பனை செய்து வருவதும், அதனை காவல்துறையினர் பறிமுதல் செய்து அளிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

அதுமட்டுமில்லாமல் தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்களிடையே போதைபொருள் பழக்கத்தை ஒழிக்க கூடிய வகையில் நூதன விளம்பரம் ஒன்றை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. அதில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணகிரி மாவட்டம் மது அருந்துதல், போதைப் பொருட்கள் சாப்பிடுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் என்றும், முதல் பரிசு- மரணம், இரண்டாம் பரிசு- புற்றுநோய் மூன்றாம் பரிசு- காச நோய், பக்கவாதம் ஆறுதல் பரிசு- பண நஷ்டம் பரிசு அளிப்பவர் எமதர்மராஜா என்றும் 100% உத்தரவாதம் பரிசுகள் என்று குறிப்பிட்டிருந்தது. இந்த நூதன முறையில் மது பிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றன. மேலும் இந்த விளம்பர பலகை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |