Categories
மாநில செய்திகள்

மது பிரியர்கள், அசைவ பிரியர்களுக்கு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை 5 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த வாரம் பண்டிகை காலம் என்பதால் தடுப்பூசி முகாம் நடத்தப்பட வில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பதில் அக்டோபர் 23ஆம் தேதி சனிக்கிழமை 6 ஆம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 50,000 முகாம்களில் சனிக்கிழமை 6 ஆம் கட்ட தடுப்பூசி முகாம் நடக்கும். அசைவப் பிரியர்கள், மது குடிப்போர் ஞாயிற்றுக்கிழமை முகாம்களில் பங்கேற்காமல் இருக்கிறார்கள். அசைவம், மது எடுத்துக்கொண்டால் தடுப்பூசி செலுத்தக் கூடாது என்ற வதந்திகளை நம்புகிறார்கள். இது தவறான செய்தி. அவர்கள் தடுப்பூசி போடும் விதமாக சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |