மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வாலிபர் மதுபோதையில் பூச்சி மருந்தை குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வேட்டங்குடி கிராமம் மெயின் ரோட்டில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேரரசன் என்ற மகன் இருந்தார். இவர் திருமணம் ஆகாதவர். இந்நிலையில் இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இவர் கடந்த 15-ஆம் தேதி மது போதையில் இருந்துள்ளார். அப்போது வயலுக்கு தெளிப்பதற்காக வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார்.
இதனால் அவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாகப் இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து புதுப்பட்டினம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.