தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் அருகே ஆற்றூர் கொற்றன்விளை பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கலா என்ற மனைவியும், அஜித், அஜின் என்ற 2 மகன்களும் இருக்கின்றனர். இதில் அஜித் வெளிநாட்டிலும், அஜின் மேக்காமண்டத்தில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் செல்லத்துரையும் அஜினும் மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த செல்லத்துரையின் மனைவி கலா தன்னுடைய தங்கையின் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பிறகு அஜினின் மனைவி மோனிஷாவையும் திங்கள்சந்தைக்கு பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர்.
இதனால் செல்லத்துரை மற்றும் அஜின் ஆகிய இருவரும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இந்நிலையில் செல்லதுரை ரப்பர் தோட்டத்தில் பிணமாக கிடப்பதாக திருவட்டார் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் செல்லத்துரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்லத்துரை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் தந்தையை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக அஜினை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.