கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே புலவன்விளை பகுதியில் சுந்தர் ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும் 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் சுந்தர் ராஜூக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சுந்தர்ராஜ் விஷம் குடித்துவிட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சுந்தர்ராஜை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுந்தர்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் தக்கலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.