குடிபோதையில் தகராறு செய்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள ராயபுரம் பகுதியில் சரவணன் (40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எம்சி ரோடு பகுதியில் சாலையோரம் துணி வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி முத்துலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் 1 மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் சரவணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், தினந்தோறும் குடித்துவிட்டு மனைவியிடம் வந்து தகராறு செய்து வந்துள்ளார். இதனையடுத்து வழக்கம் போல் வீட்டிற்கு குடித்து விட்டு வந்த சரவணன் முத்துலட்சுமியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது தஞ்சாவூரில் உள்ள உன்னுடைய சொத்தை விற்று பணத்தை கொண்டு வா என கூறி முத்துலட்சுமியின் ஆடைகளை கழற்றி நிர்வாணமாக்கி அவரை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த முத்துலட்சுமி பனியனால் சரவணனின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். அதன் பிறகு தன்னுடைய கணவரின் தம்பி சாமிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உங்களுடைய அண்ணன் மாரடைப்பால் இறந்து போய்விட்டார் என கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த சாமி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கவே, ராயபுரம் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணனின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முத்துலட்சுமியிடம் விசாரணை செய்ததில், மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. எனவே காவல்துறையினர் முத்துலட்சுமியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.