பெயிண்டர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தோல்ஷாப் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெயிண்டரான மாரிமுத்து(26) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மாரிமுத்து கீழ்குப்பம் பகுதியில் இருக்கும் முடி திருத்தும் கடை அருகே வைத்து மது போதையில் சிலரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது முடி திருத்தம் செய்ய வந்த மைக்கேல் என்பவரிடமும் மாரிமுத்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த மைக்கேல் சேவிங் செய்யும் கத்தியால் மாரிமுத்துவை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனால் ரத்த வெள்ளத்தில் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று மாரிமுத்துவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மைக்கேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.