மது போதையில் லாரியை தாறுமாறாக ஓட்டிய ஓட்டுநர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவில் ஏதாவது ஒரு இடத்தில் தினந்தோறும் சாலை விபத்துகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த சாலை விபத்துகளை தடுப்பதற்காகன நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர். அதன்படி இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயம், காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம், வேகத்தடை பகுதிகளில் மெதுவாக செல்லுதல், விபத்து பகுதிகளில் எச்சரிக்கையாக வண்டி ஓட்டுதல், மது அருந்திவிட்டு வண்டி ஓட்டக்கூடாது, மிதமான வேகத்தில் சாலையில் செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை காவல்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு விதித்துள்ளனர். இருப்பினும் எதிர்பாராத விதமாக ஏதாவது ஒரு இடத்தில் சாலை விபத்துகள் அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது.
ஆனால் சிலர் மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவதால் விபத்து ஏற்படுத்துவதும் உண்டு. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கள் பகுதிக்கு உர மூட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது. இந்த ஓட்டுனர் தர்மபுரம் மணிக்கட்டி பொட்டல் பகுதியைச் சேர்ந்தவர். இவர் மது போதையில் லாரியை ஒட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மது போதையில் இருந்த ஓட்டுநர் தாறுமாறாக வண்டியை ஓட்டி ஒரு கார் மற்றும் வேன் மீது பயங்கரமாக மோதினார். இதனையடுத்து சாலையோரம் என்ற ஒரு மரத்தில் லாரி மோதி நின்றது. இது தொடர்பாக கருங்கல் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் லாரி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.