திண்டிவனத்தில் தலைமை காவல் அதிகாரி மது போதையில் காரைஒட்டியதில் அதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த பெரமண்டூர் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் கோபாலபுரத்தில் உள்ள தனது வயல் வெளியை பார்வை பார்த்துவிட்டு புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். அப்பொழுது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த போலீஸ் கார் ஒன்று தர்மராஜ் இருசக்கர வாகனத்தின் மீது பின்புறமாக மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் தர்மராஜ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆனால் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனர் காரை நிறுத்தாமல் சென்றிருக்கிறார். இதையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் 3 கிலோமீட்டர் தூரம் வேகமாக அந்த காரை துரத்தி சென்று மடக்கி பிடித்துள்ளனர்.மேலும் கார் ஓட்டுநருக்கு தர்ம அடி கொடுத்து மயிலம் போலீசாரிடம் ஒப்படைத்து இருக்கின்றனர்.
போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்ததில் விபத்தை ஏற்படுத்தியவர் செய்யாறில் தலைமை காவலராக பணியாற்றி வந்த குமரவேல் என்பதும் தனது நண்பர்களுடன் புதுச்சேரிக்கு சென்று மது அருந்திவிட்டு மீண்டும் செய்யாறு செல்லும் போது மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்துள்ளது.