மது போதையில் இளம்பெண் வாஷிங்மெஷினில் உள்ளே மாட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழக மாணவி ரோஸி கோல் என்பவர் தனது தோழிகளுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். இதனால் அதிக போதையில் இருந்த அவர் நிதானத்தை இழந்து வாஷிங்மெஷின் உள்ளே விளையாட்டாக புகுந்துள்ளார். ஆனால் அவரால் அதில் இருந்து வெளியில் வர முடியாத அளவிற்கு சிக்கிக்கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்தப் பெண்ணை மிஷின் உள்ளே இருந்து பாதுகாப்பாக மீட்டனர். அதன்பிறகு ரோஸி இனி இதுபோன்ற விபரீத விளையாட்டுக்களில் ஈடுபட மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
சுமார் 20 நிமிடங்கள் அவர் வாஷிங் மெஷினின் உள்ளே சிக்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த காட்சிகள் அடங்கிய காணொளி யை ரோஸியும் அவரது தோழியும் டிக் டாக் வீடியோவாக சமூகவலைதளத்தில் பகிர்ந்து தற்போது வைரலாக பரவி வருகிறது. இது குறித்து செய்தி வெளியிட்ட இணையதளம் மரங்களில் இருக்கும் பூனைகளை மட்டுமல்லாது வாஷிங்மெஷினில் இருக்கும் மாணவர்களையும் தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றுவார்கள் என்று வேடிக்கையாக பல்கலைக்கழக மாணவி கூறியதாக குறிப்பிட்டுள்ளது.
— TheTabTikToks (@TikTab) October 2, 2020