தி.மு.க ஊராட்சி கவுன்சிலர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நடுவீரப்பட்டு எட்டயபுரம் பகுதியில் சதீஷ்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நடுவீரப்பட்டு 7-வது வார்டு உறுப்பினராகவும், தி.மு.க வார்டு செயலாளராகவும் பதவி வகித்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷுக்கும் அதே பகுதியில் வசிக்கும் தி.மு.க-வைச் சேர்ந்த லோகேஸ்வரி என்பவருக்கும் இடையே கட்சி தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த லோகேஷ்வரியை சதீஷ் தட்டி கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் சமாதான பேச்சு வார்த்தை நடத்த தனது வீட்டிற்கு வருமாறு சதீஷை லோகேஸ்வரி அழைத்துள்ளார். அதன்படி சதீஷ் அங்கு சென்றவுடன் கதவை தாழ்ப்பாள் போட்டு மர்ம நபர்கள் சதீஷை சரமாரியாக வெட்டி கொலை செய்து உடலை இழுத்து வந்து சாலையில் போட்டு விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதீஷின் உடலை விட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் தலைமறைவாக இருக்கும் லோகேஸ்வரியை தீவிரமாக தேடி வருகின்றனர்.