Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

காலம் ரொம்ப மாறிப் போச்சு… பெண்களே இப்படி செய்யலாம்மா…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டில் திருட்டுத்தனமாக மது விற்ற பெண்ணை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கந்தர்வகோட்டை பகுதியை சேர்ந்த ஜெயந்தி என்ற பெண் வீட்டில் வைத்து மது விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த ரகசிய தகவலின் படி கந்தர்வகோட்டை பகுதிக்கு  சென்று காவல் துறையினர் ஜெயந்தி என்பவரின் வீட்டில் சோதனை செய்துள்ளனர்.

அப்போது ஜெயந்தி வீட்டின் பின்புறம் வைத்து திருட்டுத்தனமாக மது விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ஜெயந்தியிடமிருந்து  10 மது பாட்டில்களை பறிமுதல் செய்து கைது செய்த காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |