புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கின் போது மது விற்ற கூட்டணியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது இரவு நேரங்களில் ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பணியின் போது மது விற்பனை செய்த நாகராஜ், அமுதா, சசிகலா, சசிகுமார் மற்றும் கவிக்குயில் ஆகிய 5 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் ஊரடங்கின் போது மது விற்பனை செய்ததற்காக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.