- அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மார்க் கடையின் பின்புறம் மறைமுகமாக வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்த 5 நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயம் இடையார் சாலையில் இருக்கிற டாஸ்மார்க் கடையின் பின்புறம் வைத்து மது விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு ஐந்து பேர் மது விற்றதை பார்த்த காவல் துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையின் போது அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன், பார்வதி, கரடிகுளம் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூனன், ஜெயங்கொண்டம் பகுதியில் வசிக்கும் கொளஞ்சிநாதன், மற்றும் உடையார்பாளையத்தை சேர்ந்த முருகன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுக் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.