Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நாங்களும் திறப்போம்…. நீங்க நடவடிக்கை எடுத்தே ஆகனும்…. கைது செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மதியம் 12 மணிக்கு மேல் டாஸ்மாக் கடை அருகே மது விற்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு மதியம் 12 மணிக்கு மேல் கடைகளை அடைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பேராம்பூர், ஆவூர் ஆகிய பகுதிகளில் 12 மணிக்கு பிறகும் டாஸ்மாக் கடைகள் அருகே மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்திருக்கிறார்கள்.

இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த மளிகை மற்றும் காய்கறி கடைக்காரர்கள் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்களும் கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்வோம் என்று ஆத்தூர் காவல் நிலையத்தில் அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடை முன்பு வியாபாரம் செய்து கொண்டிருந்த பேராம்புரை  சேர்ந்த சுப்பிரமணி என்பவரை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |