Categories
அரசியல்

“மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல் என் நிலைமை”…? முதல்வரை கதறவிட்ட மூத்த அமைச்சர்கள்..!!!!

திமுகவின் பொது குழு கூட்டம் இன்று சென்னை அமைந்த கரையில் நடைபெற்றுள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் போட்டி இல்லாமல் அந்த கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலமாக அவர் திமுகவின் தலைவராக இரண்டாவது முறையாக பொறுப்பு ஏற்கின்றார். அதேபோல மகளிர் அணி செயலாளராக இர்நுத கனிமொழி துணை பொது செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஒரு பக்கம் திமுகவின் தலைவராக பொறுப்பேற்ற முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தாலும் மற்றொரு பக்கம் அவர் பொதுக்குழுவில் பேசிய ஒரு விஷயம் பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதாவது பொதுக்குழுவில் அவர் மழையே பெய்யவில்லை என்றாலும் என்னை தான் குறை சொல்வார்கள்.

அதிகமாக மழை பெய்தாலும் என்னை தான் குறை சொல்வார்கள் ஒரு பக்கம் திமுக தலைவர் மற்றொரு பக்கம் தமிழ்நாடு முதலமைச்சர் மத்தளத்திற்கு இரண்டு பக்கங்களும் அடி என்பதை போல என்னுடைய நிலைமை இருக்கிறது. மேலும் என்னை துன்புறுத்துவது போல மூத்த அமைச்சர்கள் நிர்வாகிகள் செயல்படக்கூடாது தினம் தோறும் கட்சிக்காரர்கள் யாரும் பொது பிரச்சினையை உருவாக்கி இருக்கக் கூடாது என நினைப்பதோடு தான் நான் கண்விழிக்கின்றேன். மேலும் இது சில நேரங்களில் தூங்கவிடாமலும் செய்கிறது என தெரிவித்துள்ளார் முன்னதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஓசி பஸ்ஸில் தான போறீங்க என்று பேசியது தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

திராவிட மாடல் என்பது இதுதானா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர் அதேபோல ஆராசா மனுதர்மம் பற்றி பேசியதும் சர்ச்சையாகி உள்ளது. அதே சமயம் ஆ ராசா பேசியது அரசியல் தளத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் பொன்முடி பேசியதோ பொதுமக்கள் புழங்கும் தளத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. பொன் முடி மட்டுமல்லாமல் கே என் நேரு போன்றவர்கள் மேயர் போன்றவர்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக முன்வைக்கப்படுகிறது. இதனால் திமுகவின் மீது பலர் விமர்சனத்தை வைக்க தொடங்கியுள்ளனர் முதல்வரும் கடும் அப்சட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் பாஜகவினர் கதறுவார்கள் என்று பார்த்தால் அமைச்சர்களால் முதலமைச்சரை கதறுகின்றார். ஏனென்றால் இதன் மூலமாக நடக்கும் ஆட்சி நிலையை புரிந்து கொள்ளலாம் என எதிர்க் கட்சியினர் கூற ஆரம்பித்திருக்கின்றார்கள் மேலும் ஸ்டாலின் பேசும் வீடியோவை நெட்டிசன்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றார்கள்.

Categories

Tech |