Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மத்திய‌ அரசு தேர்வு எழுதுபவர்களின் கவனத்திற்கு…. கண்டிப்பாக இத ஃபாலோ பண்ணனும்…. மாநில அரசின் அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் மத்திய பாதுகாப்பு படை பணிக்கான தேர்வுகள் நடைபெற இருக்கிறது. இந்த வருடத்திற்கான தேர்வு மையங்களில் புதுச்சேரியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வு நாளை 3 சுற்றுகளாக நடைபெற இருக்கிறது. அதன்படி காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் 2 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் தேர்வு நடைபெறும். இந்த தேர்வு லாஸ்ட்பேட்டை வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், செல்ல பெருமாள் பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை மொத்தம் 257 பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக காலை 7:30, 8:30 மற்றும் 9:30 மணி அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. இந்த பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருக்கும்.

இதேபோன்று தேர்வு மையங்களில் இருந்து மாலை 4:30 மற்றும் 5:30 மணி அளவில் சிறப்பு பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு வருவதற்கு இயக்கப்படும். இந்நிலையில் தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாகவே தேர்வர்கள் அறைக்குள் வந்து விட வேண்டும். அதன்பின் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த தேர்வு எழுத வருபவர்கள் இ அட்மிட் கார்டு மற்றும் குறிப்பிட்ட எண் உள்ள புகைப்பட அட்டை ஆகியவற்றை உடன் கொண்டு வருவதோடு, ப்ளூடூத் சாதனங்கள், கேமரா, பென்டிரைவ், செல்போன், ஸ்மார்ட் வாட்ச், மின்னனு சாதனம் போன்ற தகவல் தொழில்நுட்ப பொருட்களை கொண்டுவரக்கூடாது. மேலும் தேர்வு எழுத வருபவர்கள் மற்றும் அரை கண்காணிப்பாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிவதோடு கொரோனா விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்ற வேண்டும்.

Categories

Tech |