மத்திய அமைச்சர்கள் மக்களுடன் தொடர்பு இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது, இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதை தவிர்த்து பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன.
இந்நிலையில் பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுக்கு ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதில் மத்திய அமைச்சர்கள் உள்ளூர் பகுதி மக்களுடன் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவியையும் செய்யுங்கள். நிலைமையை தெரிந்துகொள்ள பொதுமக்களின் கருத்துகளை கேளுங்களேன் கூறியுள்ளார். கொரோனா 2- வது அலை தொடங்கியபின் மத்திய அமைச்சர்களுடன் மோடி நடத்திய முதல் ஆலோசனை கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.