Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடல்நிலை எப்படி இருக்கு….? மருத்துவர்கள் தகவல்…!!

மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) தனியார் வார்டில் நேற்று  அனுமதிக்கப்பட்டார். 63 வயதான அவர் மதியம் 12 மணியளவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வழக்கமான பரிசோதனை மற்றும் வயிற்றில் ஏற்பட்ட தொந்தரவுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிகிறது.

Categories

Tech |