தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை
அமைச்சர் ஹர்ஷவர்தனை சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் 8 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் அமைப்பதற்கு தேவையான இடவசதி மட்டுமின்றி அதற்கான ஒப்புதலையும் வழங்கியுள்ளது.
வரும் மார்ச் மாதம் 1ம் தேதி தமிழகத்தில் புதிதாக அமைக்கவுள்ள 8 மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவை தமிழக முதல்வர் பழனிசாமி மேற்கொள்ளவுள்ளார். ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவள்ளூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளானது அமைக்கப்பட உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக மேற்கொள்ளப்பட்டு வரும் மருத்துவக்கல்லூரிகள் தொடர்பான முக்கிய உதவிகளுக்கு மத்திய அமைச்சரை தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து பேசுவதாக அரசு வட்டாரங்களில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.