மத்திய அரசாங்கத்தின் வரி வருவாய் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய நிதி அமைச்சகம் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் அரசின் வருவாய் நேரடி வரி விதிப்பில் 49 சதவீதம் மற்றும் மறைமுக வரிகளில் 20 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிதி ஆண்டில் அரசின் மொத்த வருவாய் 34 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதன் மூலம் பட்ஜெட்டில் கணித்ததை விட 5 லட்சம் கோடி ரூபாய் அதிக அளவில் வருமானம் கிடைத்துள்ளது. மேலும் அரசின் நேரடி வரி விதிப்பின் மூலமாக 14.10 லட்சம் கோடி ரூபாயும், மறைமுக வரியின் மூலமாக 12.90 லட்ச ரூபாயும் கிடைத்துள்ளது. இதன் மூலம் அரசின் பொருளாதார வளர்ச்சி மீட்சி அடைவது தெளிவாக தெரிய வருகிறது குறிப்பிடப்பட்டுள்ளது.